சிறுநீரகத்தைச் செயலிழக்க வைக்கும் ‘ஆல்மாண்ட் - கிட்’ சிரப் தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை, ஜன. - தமிழகத்தில் ‘ஆல்மாண்ட்-கிட்’ (Almont-Kid) என்ற சிறுவர்களுக்கான மருந்தில் உயிருக்கு ஆபத்தான நச்சுப் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த மருந்தை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என தமிழக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அவசர கால எச்ச ரிக்கை விடுத்துள்ளது. பீகாரைச் சேர்ந்த ‘டிரிடஸ் ரெமிடிஸ்’ (Tridus Remedies) என்ற நிறுவனம் தயாரித்த ஆல்மாண்ட்-கிட் (Almont-Kid) என்ற சிரப் மருந்தின் பேட்ச் நம்பர். ஏஎல்-24002 என்ற தொகுப்பில் எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வேதிப்பொருள் பொதுவாகத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவது. இதனைச் சிறுவர்கள் உட்கொள்ளும் போது, அது மிக வேகமாகக் கல்லீரல் மற்றும் சிறுநீரகங் களைப் பாதித்து, சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) மற்றும் மரணத்தைக்கூட ஏற்படுத்தக்கூடும். மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) அளித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனைத்து சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ் தர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குக் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது: பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பேட்ச் மருந்துகளை உடனடியாக விற்பனையிலிருந்து நீக்க வேண்டும். இந்த மருந்தை ஏற்கனவே உட்கொண்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நச்சு அறிகுறி கள் தென்படுகிறதா என்பதை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மருந்தின் விநியோகம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 94458 65400 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த மருந்துக்குத் தடை விதிக்கப் பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த எச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தயாரிக்கப் படும் சில இருமல் மற்றும் சளி மருந்துகள் இது போன்ற நச்சுக் கலப்படங்களால் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன், அதன் தயாரிப்பு விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ள எச்ச ரிக்கைப் பட்டியலையும் சரிபார்த்து வழங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.