திண்டிவனம் அருகே மொளசூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை சிற்பம்
Aug 25 2025
10

விழுப்புரம், ஆக.23-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது மொளசூர் கிராமம். இப்பகுதியில் பல்லவர் கால கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தை விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் கண்டறிந்தார்.
1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் உத்தரவின் பேரில் கடலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் எஸ்.ஜெயரத்னா மொளசூர் கிராமத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்டார். அப்போது உடன் இருந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் சிற்பத்தின் அமைப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கினார். மேலும் கொற்றவை சிற்பத்தின் அமைவிடம், பாதுகாப்பு, பொதுமக்கள் வழிபாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து காப்பாட்சியர் ஜெயரத்னா விரிவாக ஆய்வு செய்தார். இது தொடர்பான அறிக்கை துறையின் இயக்குநருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் பழமைவாய்ந்த சிற்பங்களை உரிய முறையில் பாதுகாக்க அரசு அருங்காட்சியகங்கள் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கோரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின் போது மாவட அரிமா சங்கத்தலைவர் ப.கார்த்திக் கருணாகரன் உடனிருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?