
தாம்பரம், ஆக. 10
சென்னையை அடுத்த குரோம்பேட்டை தாலுகா அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை - ஜிஎஸ்டி சாலையோரம் குரோம்பேட்டை தாலுகா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக அரசு தரம் உயர்த்தியது- இதையடுத்து தாம்பரத்தில் 5 ஏக்கர் பரப்பு வளாகத்தில், ரூ.110 கோடி மதிப்பீட்டில் ஏழு தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்கு 7 அறுவை சிகிச்சை மையங்கள், 111 படுக்கைகள் மற்றும் 289 பொதுப்பிரிவு படுகைகள் என மொத்தம் 400 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்புகள் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின், அதற்கு அருகே ரூ.7.24 கோடியில் அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை புறநகர் பிரிவு கட்டிடத்தையும், ரூ.1.90 கோடி மதிபீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வாக கட்டிடத்தையும், மூன்று நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி,கலெக்டர் சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?