தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயம் பருப்பு நிறு​வனத்தை வாங்கியது ரிலை​யன்ஸ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயம் பருப்பு நிறு​வனத்தை வாங்கியது ரிலை​யன்ஸ்


 

புதுடெல்லி: முகேஷ் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸின் எப்​எம்​சிஜி பிரி​வான ரிலை​யன்ஸ் கன்​ஸ்​யூமர் புராடக்ட்ஸ் (ஆர்​சிபிஎல்), தமிழ்​நாட்​டைச் சேர்ந்த உதயம் பிராண்டை வாங்​கி​யுள்​ளது.


உதயம் அக்​ரோ புட்ஸ் நிறு​வனம் தமிழகத்​தில் பருப்​பு​ வகைகளை உதயம் பிராண்​டில் சந்​தைப்​படுத்தி வரு​கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்​பான்​மை​யான பங்​கு​களை ரிலை​யன்ஸ் கன்​ஸ்​யூமர் புராடக்ட்ஸ் கையகப்​படுத்தி உள்​ளது. இதன் மூலம் தமிழகத்​தில் டாடா கன்​ஸ்​யூமர் புராடக்ட்​ஸ், ஐடி ப்ரெஷ் புட் மற்றும் ஆர்க்லா நிறு​வனத்​துக்கு சொந்​த​மான எம்​டிஆர் ஆகிய​வற்​றுக்கு எதி​ராக வலு​வான போட்​டி​யில் ரிலை​யன்ஸ் நிறு​வனம் களமிறங்கியுள்ளது.


உதயம் நிறு​வனத்​தின் நிறு​வனர்​களான எஸ்​.சு​தாகர் மற்​றும் எஸ்.தினகர் தமிழகத்​தில் பிர​தான உணவுப் பொருட்​கள் வர்த்தகத்தில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக அனுபவம் கொண்டவர்கள். உதயம் நிறு​வனத்​தின் பேக்​கேஜ் செய்​யப்​பட்ட பிராண்ட் பருப்பு வகை​களின் வணி​கத்தை விரிவுபடுத்​தி​ய​தில் அவர்​களுக்கு முக்​கிய பங்கு உண்​டு.


எனவே, இந்த கையகப்படுதலுக்கு பிறகும் உதயம்ஸ் நிறு​வனத்தில் அவர்​கள் சிறு​பான்மை பங்​கு​களை தொடர்ந்து தக்​க​வைத்​துள்​ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%