தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது: உயர்கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது: உயர்கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை ராணிமேரி கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 100 மாணவிகளுக்கு பதக்கங்களுடன் பட்டமும், 1,424 மாணவிகளுக்கு பட்டமும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, கல்லூரி முதல்வர் பா.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை: தமிழகத்​துக்கு கல்வி நிதி தர மத்​திய அரசு மறுக்​கிறது என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற மகளிர் கல்​லூரி பட்டமளிப்பு விழா​வில், உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் குற்​றம்​சாட்​டி​னார். சென்​னை, ராணி மேரி கல்​லூரி​யின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடை​பெற்​றது.


இதில் உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்​பிடம் பெற்ற 100 மாணவி​களுக்கு பதக்​கங்​கள் அணி​வித்து பட்​டங்​களை வழங்​கி​னார்.


மொத்​தம் 1,424 பேருக்கு பட்​டம் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது:தமிழகத்​தில் உயர்கல்வியை மேம்​படுத்த முதல்​வர் ஸ்டா​லின் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார்.


இந்த ஆண்டு புதி​தாக 15 அரசு கலை அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. ஏழை மாணவ, மாணவி​கள் பயன்​பெறும் வகை​யில், அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் கூடு​தலாக 20 சதவீத இடங்​கள் உருவாக்கப்​பட்​டுள்​ளன.


கல்விக்கு முக்கியத்துவம்: அரசு பள்​ளி​யில் படித்து உயர் கல்விக்​குச் செல்​லும் மாணவி​கள் பயன்​பெறும் வகை​யில், தமிழக அரசு புது​மைப் பெண் திட்​டத்தை செயல்​படுத்தி வரு​கிறது. இத்​திட்​டத்​தின் கீழ், ராணி மேரி கல்​லூரி​யில் மட்​டும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவி​கள் பயன்​பெற்று வரு​கின்​றனர்.


தமிழக அரசு கல்விக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுத்து வரும் நிலை​யில்,மத்​திய அரசு, தமிழகத்​துக்கு கல்வி நிதி தர மறுத்து வருகிறது. அதோடு, பல்​கலைக் கழகங்​களில் துணைவேந்​தர் நியமனத்​திலும் இடையூறுகளை செய்து வரு​கிறது.


எத்​தனை இடையூறுகள் வந்​தா​லும் அவற்றை எல்​லாம் உடைத்து தமிழகத்​தில் கல்​வியை உச்​சத்​துக்கு எடுத்​துச் செல்​வார் முதல்வர் ஸ்டா​லின். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார். விழா​வில், கல்​லூரி​யின் முதல்​வர் பி.உமா மகேஸ்​வரி, தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் எஸ்​.​சாந்​தி, மயி​லாப்​பூர் எம்​எல்ஏ த.வேலு, கல்​லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்​லி, பேராசிரியைகள், மாணவி​கள்​, பெற்​றோர்​ பங்கேற்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%