தஞ்சாவூர் கலை பண்பாட்டுத் துறை சார்பில்நாட்டுப்புறக் கலைஞர்கள் சந்திப்பு; நலிவுற்றக்கலைஞர்களுக்கு ஓய்வூதியம், குறை அறியும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் கலை பண்பாட்டுத் துறை சார்பில்நாட்டுப்புறக் கலைஞர்கள் சந்திப்பு; நலிவுற்றக்கலைஞர்களுக்கு ஓய்வூதியம், குறை அறியும் நிகழ்ச்சி


தஞ்சாவூர், நவ.5–


தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நலிவுற்றக் கலைஞர்களுக்கு ஓய்வூதிய விண்ணப்பம் ஆய்வு, குறைகள் அறிந்திடல் நிகழ்ச்சியை, கலை பண்பாட்டுத் துறை சார்பில், தஞ்சை இயக்குநர் இராஜாராமன் ஏற்பாடு செய்திருந்தார்.


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா நூற்றாண்டு விழா அரங்கத்தில் தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் கலை பண்பாட்டுத் துறை, சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களை சந்தித்து கலைஞர்களுக்கு கலைப் பயிற்சி அளித்து நலிவுற்றக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் விண்ணப்பம் அளித்துள்ள கலைஞர்களை நேரில் ஆய்வு செய்து, கலைஞர்களின் குறைகளை கேட்டு அறிந்திட தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ம. இராஜாராமன் ஏற்பாடு செய்திருந்தார்.


பாராட்டுச் சான்றிதழ்


இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் சவகர் சிறுவர் மன்றத் திட்ட அலுவலர் வடிவேல் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் முகாமில் கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு பயிற்சிப் பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி விழாப்பேருரை யாற்றினார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ம. இராஜாராமன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இக்கலைப் பயிற்சியில் கலைப் பயிற்றுநர்களாக நாட்டுப்புறப் பாடகர் கலைமாமணி சின்னபொண்ணு குமார், மத்திய அரசு விருது பெற்ற பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞர் நாடிரான் ஜீவராவ், கரகாட்டக் கலைஞர் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன், நாட்டுப்புறப் பாடகர் கலைமாமணி வளப்பக்குடி வீர.சங்கர், பம்பைக் கலைஞர் கலைமாமணி வால்டர் ஆண்ட்ரோஸ், நாடகக் கலைஞர் கலைமாமணி மா.வீ.முத்து. நையாண்டிமேள நாதசுரக் கலைஞர் சி.ஆனந்த், பொம்மலாட்டக் கலைஞர் கலை நன்மணி டி.எஸ்.முருகன். கிராமிய நாதஸ்வரக் கலைஞர் பி.வெள்ளைச்சாமி, பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞர் கலைச் சுடர்மணி பானுமதி ராஜரெத்தினம், கோலாட்டக் கமைலஞர் வெ. நாராயணசாமி, சிலம்பாட்டக் கலைஞர் கலை முதுமணி மணப்படையூர் சுந்தரம், தப்பாட்டக் கலைஞர் இரா. மதியழகன், நாதஸ்வரக் கலைஞர் கலைச் சுடர்மணி அ.பாண்டியராஜன், பேண்டு வாத்தியக் கலைஞர் ஆரோக்கியதாஸ், நாதஸ்வரக் கலைஞர் கலைச் சுடர்மணி பி.எம். இளையராஜா, புலியாட்டக் கலைஞர் ஏசுதாஸ். இலாவணிக் கலைஞர் நா.ஜோதிவேல், கிராமியக் கலைஞர் மாரியப்பன், பேண்டு வாத்தியக் கலைஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். வல்லம் சவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மைய ஓவிய ஆசிரியர் மாதவன் நன்றி கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%