பல்லடம், திருப்பூர் தெற்கு பகுதிகளை சார்ந்த 145 பேருக்கு வீட்டுமனைப்பட்டா: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

பல்லடம், திருப்பூர் தெற்கு பகுதிகளை சார்ந்த 145 பேருக்கு வீட்டுமனைப்பட்டா: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்



திருப்பூர், நவ. 5–


திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட உகாயனூர், இச்சப்பட்டி மற்றும் வடுகபாளையம் பகுதிகளை சார்ந்த 145 பயனாளிகளுக்கு கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் வருவாய்த் துறையின் சார்பில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப்பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் வழங்கினார்.


அப்போது அவர் பேசும்போது, முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு முடிந்தளவு இலவச வீட்டுமனை பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டடார்கள். திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் நம்முடைய வேண்டுகோளை ஏற்று பல்வேறு கட்டங்களாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அலுவலர்களிடம் எடுத்துச் கூறி பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து அதற்கான இடங்களை தேர்வு செய்து இருக்கக்கூடிய இடங்களில் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையின் மூலமாக இன்றைய தினம் பட்டா வழங்கபட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பட்டா வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.


அந்த வகையில், வருவாய்த் துறையின் சார்பில் பல்லடம் மற்றும் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட வடுகபாளையம், உகாயனூர் மற்றும் இச்சிப்பட்டி பகுதிகளை சார்ந்த 145 பேருக்கு ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் 2021 மே 7 முதல் இதுவரை 10,725 நத்தம் பட்டாக்களும், 19,35 இ -பட்டாக்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2,840 பட்டாக்களும், பூமிதானம் 1,703 பட்டாக்களும், கிராம கணக்கில் மாறுதல் 23,611 பட்டாக்களும் என மொத்தம் 58,234 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சரவணன், பல்லடம் வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%