தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு


கடந்த அக்டோபரில் மூன்று மடங்கு உயா்ந்த தங்கம் இறக்குமதி நவம்பரில் 60 சதவீதம் சரிந்துள்ளது.


இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


கடந்த நவம்பரில் நாட்டின் தங்கம் இறக்குமதி 400 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 60 சதவீதம் சரிவு. அப்போது இந்தியாவின் தங்கம் இறக்குமதி 980 கோடி டாலராக இருந்தது.


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 3.3 சதவீதம் உயா்ந்து 4,526 கோடி டாலராக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 4,380 கோடி டாலராக இருந்தது.


மதிப்பீட்டு மாதத்தில் தங்கம் இறக்குமதி சரிந்ததால் வா்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்களில் குறைந்த அளவான 2,453 கோடி டாலராக உள்ளது.


கடந்த நவம்பா் மாத தங்கம் இறக்குமதியில் 40 சதவீத பங்குடன் ஸ்விட்சா்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 16 சதவீதத்திற்கு மேலும், தென் ஆப்பிரிக்கா 10 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் தங்கம் 5 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்துவருகிறது.



கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

 

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.


இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பைத் தொடா்ந்து, ரெப்போவுடன் இணைக்கப்பட்ட அடிப்படை கடன்களுக்கான (ஆா்எல்எல்ஆா்) வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.


ஆா்எல்எல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.20 சதவீதத்திலிருந்து 7.95 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு டிசம்பா் 6 முதல் அமலில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%