டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை அணிகள் வெற்றி
Dec 27 2025
11
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 12 வயதுக்குட்டுப் பட்டவர்களுக்கான டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி பட்டாமிராமி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேந்திர நாயுடு தொடங்கி வைத்தார்.
2வது நாள் ஆட்டத்தில் கிரூப் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் வேலூர் –காஞ்சிபுரம் அணிகள் மோதின. வேலூர் அணி 40 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காஞ்சிபுரம் அணியின் மோஹித் 8 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய காஞ்சிபுரம் அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 12.2 ஓவர்களில் 60 ரன்களை எடுத்தது. பாரத் மித்ரன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் காஞ்சிபுரம் அணி எளிதான வெற்றியை பெற்றது. குரூப் பி பிரிவில் திருவண்ணாமலை அணி 33.5 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராணிப்பேட்டை அணியி நவீன் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை கட்டுப்படுத்தினார். தொடர்ந்து களம் இறங்கிய ராணிப்பேட்டை அணி 30.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யுவனேஷ் 32 ரன்கள் எடுத்ததுடன், C பிரகலாதன் 2/15 என்ற பந்துவீச்சுடன் வெற்றிக்கு துணைநின்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?