ஜெலன்ஸ்கி நினைத்தால் போரை உடனே முடிக்கலாம்: டிரம்ப் பரபரப்பு கருத்து
Aug 19 2025
14

வாஷிங்டன்,
உக்ரைன் - ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இதற்காக, ரஷிய அதிபர் புதினை கடந்த 15 ஆம் தேதி சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது போரை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும், போரை நிறுத்துவதற்கான நிபந்தனைகளை புதின், டிரம்பிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று டிரம்ப் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு நடைபெற இருக்க கூடிய சூழலில், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டதாவது: ”உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நினைத்தால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக நிறுத்த முடியும். அல்லது தொடர்ந்து சண்டையிடலாம். எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒபாமாவால் 12 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித சண்டையும் இல்லாமல் ரஷ்யாவுக்கு அளிக்கப்பட்ட கிரிமியா திருப்பி அளிக்கப்படாது. நேட்டோவிலும் உக்ரைன் இணைய முடியாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” என்று பதிவிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?