சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
Dec 13 2025
12
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு, சென்னை பெண்கள் (மாந்தோப்பு) மேல்நிலைபள்ளியில் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் வழகும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,90,000 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,72,000/- மதிப்பிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,44,900/- மதிப்பிலான திறன் பேசிகள், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 63,590- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 28,600/- மதிப்பிலான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் என ஆக மொத்தம் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58,99,090/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, மண்டலக்குழுத் தலைவர் (கோடம்பாக்கம்) எம்.கிருஷ்ணமூர்த்தி, தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?