"நண்பனுக்காக இறைவன் தூது சென்ற கதையை அறிவோம்... ஆனால் நண்பனுக்காக விண்ணுலகமே இறங்கி வந்த கதை தெரியுமா?"
கேரள மாநிலம் கொடுங்கலூர் அருகே உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், சைவ சமய வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான திருப்பத்தை கொண்ட தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், இந்த பூமியில் தனது வாழ்வை நிறைவு செய்து கைலாயம் சென்ற புனித பூமி இது!
⚪ வெள்ளை யானை மீது ஒரு புனிதப் பயணம்:
சுந்தரரின் வாழ்வு முடிய வேண்டிய தருணத்தில், சிவபெருமான் அவருக்கு முக்தி அளிக்க எண்ணினார். இதற்காக கைலாயத்திலிருந்து வெள்ளை யானையை பூமிக்கு அனுப்பினார் ஈசன். சுந்தரர் இத்தலத்து இறைவனைப் போற்றித் தனது கடைசிப் பதிகமான "தலைக்குத் தலை மாலை" பாடி முடித்ததும், தேவர்கள் சூழ அந்த வெள்ளை யானை மீது ஏறி விண்ணுலகம் நோக்கிப் பயணமானார்.
குதிரையில் பறந்து சென்ற சேர மன்னர்:
தன் உயிர் நண்பன் சுந்தரர் கைலாயம் செல்வதை அறிந்த சேர மன்னர் (சேரமான் பெருமான் நாயனார்), தாமும் அவரோடு செல்ல விழைந்தார். தனது குதிரையின் காதில் 'நமசிவாய' மந்திரத்தைச் சொல்ல, அந்தக் குதிரை விண்ணில் பாய்ந்து சென்று சுந்தரரின் யானையை மூன்று முறை வலம் வந்து அவருக்கு முன்னதாகவே கைலாயத்தை அடைந்தது. இன்றும் இத்தலத்தில் சுந்தரரும் சேரமானும் இணைந்தே காட்சி தருகின்றனர்.
தம்பதி ஒற்றுமைக்குச் சிறந்த தலம்:
சுந்தரருக்கும் சேரமானுக்கும் இடையே இருந்த அந்தத் தூய்மையான நட்பைப் போலவே, கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் பெருக இத்தலத்து 'தம்பதி பூஜை' மிகவும் பிரபலம்.
பிரிந்த தம்பதிகள் சேரவும்,
குடும்பத்தில் அமைதி நிலவவும்,
குழந்தை பாக்கியம் பெறவும்
இந்த பூஜையில் கலந்துகொள்வது விசேஷம்.
கோயிலின் சிறப்பம்சங்கள்:
தேவாரப் பாடல் பெற்ற கேரளாவின் ஒரே சிவத்தலம்.
அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் ஈசனுடன் கருவறையிலேயே வீற்றிருக்கிறார்.
25-க்கும் மேற்பட்ட உபசன்னதிகள் கொண்ட பிரம்மாண்டமான கேரள பாணி கோயில்.
நட்பிற்கும், பக்திக்கும் இலக்கணமாகத் திகழும் இத்தலத்தை தரிசிப்பது நம் வாழ்வின் புண்ணியம்! சிவாய நம!

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?