சுதந்திர போராட்டம் பற்றிய அரிய தகவல்கள்

சுதந்திர போராட்டம் பற்றிய அரிய தகவல்கள்


81.பாபாசாஹேப் அம்பேத்கர், 1942 ஆம் ஆண்டு முதல் 1946 ஆண்டு வரை அரசு நிர்வாகக் குழுவில் எந்த துறைக்கு ‌ பொறுப்பு வகித்தார்? 

*தொழிலாளர் நலத்துறை*


82.நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னோட்டமாக 1946ல் இடைக்கால அரசு அமைக்கப்பட்ட நாள் எது ? *02.09.1946*


83.சத்தியாக்கிரக போராட்டத்தை பிரிட்டிஷார் அடக்கிய விதம் குறித்து எழுதி, உலக நாடுகளின் கருத்தை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக மாற்ற உதவிய அமெரிக்க பத்திரிகையாளர் யார்? *வெப் மில்லர்*.


84.ஆந்திர கேசரி என போற்றப்படும் விடுதலை போராட்ட வீரர் யார்?

*டி.பிரகாசம்*


85.சுதந்திர இந்தியாவின் முதல் சுகாதாரத் துறை அமைச்சராக சேவையாற்றிய விடுதலை போராட்ட வீராங்கனை யார்?

*ராஜகுமாரி அம்ரித் கௌர்*


86.1757 பிளாசி போரில் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளுடன் போரிட்ட இந்திய மன்னர் யார்? 

*சிராஜ்-உத்-தௌலா*


87.நாட்டின் முதலாவது சுதேச அறிவியல் இயக்கமான Indian Association for the cultivation of Science ஐ நிறுவியவர் யார்? *டாக்டர் மகேந்திர லால் சர்கார்*.


88.அரசியல் அமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவர் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்துவது நாடாளுமன்றமா இந்திய தேர்தல் ஆணையமா? 

*இந்திய தேர்தல் ஆணையம்.*


89.குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெறாத சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? *நியமன உறுப்பினர்கள்.*


90.குடிமக்களின் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ள அரசியல் சாசனப்பிரிவு யாது? *பிரிவு 51A*


91.மகாத்மாகாந்தி தனது வாழ்க்கை தத்துவத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் The Kingdom of God is Within You என்ற நூலில் ஆசிரியர் யார்?

*லியோ டால்ஸ்டாய்*


92.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தொடங்கப்பட்ட நாள் எது? *15.08.1969*


93.இந்தியா இந்தியர்களுக்கே என்று முதலில் குரல் கொடுத்தார் யார்? *சுவாமி தயானந்த சரஸ்வதி.*


94.குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் யார்? 

*நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் & நியமன உறுப்பினர்கள்.*


95.எல்லை காந்தி என அழைக்கப்பட்டவர் யார்? 

*கான் அப்துல் கப்பார் கான்.*


96.இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ள இரு நகரங்கள் யாவை? *சென்னை, கயா.*


97.இந்திய அரசியல் சாசனத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் எண்ணிக்கை என்ன? *105 (2022 ஆண்டு ஆகஸ்ட் வரை)*


98.இந்திய கடற்படைகாக உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வரும் விமான தாங்கி கப்பல் எது? *INS விக்ராந்த்*


99.1927 ல் சைமன் குழுவை புறக்கணிக்கவும், தனி அரசியல் சாசனம் தயார் செய்யும் தீர்மானிக்கப்பட்ட இடம் யாது? *சென்னை.*


100.1971 ஆம் ஆண்டு இந்திய கடற்படை பாகிஸ்தானின் 4 போர் கப்பல்களை முழ்கடித்த நாள் எந்த தினமாக கொண்டாடப்படுகிறது?

*இந்திய கடற்படை தினம்*


101.கார்கில் போரில் வெல்வதற்கான இந்திய ராணுவ நடவடிக்கையின் பெயர் யாது? *ஆப்ரேஷன் விஜய்*


102.மலத்தீவை கைப்பற்றிய முயன்ற அந்நிய குழுவிடமிருந்து அந்நாட்டை காக்க இந்தியா மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையின் பெயர் யாது? *ஆப்ரேஷன் காக்டஸ் லில்லி*


103.இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாம் பொக்ரான் அணுசோதனைகளின் சங்கீத பெயர்கள் யாவை? *சிரிக்கும் புத்தர் & சத்தி*


104.நாட்டின் முதல் சுதந்திரத்தை முன்னிட்டு, அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அளித்த புகழ்மிக்க உரையின் பெயர்? 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%