சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்
Jan 03 2026
17
சீர்காழி, ஜன , 04- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மக்கள் சந்திப்பு கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக , மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வேட்டங்குடி ஊராட்சி கூழையார், இருவக்கொல்லை மற்றும் வாடி கிராம பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மலர்வழி திருமாவளவன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளருமான அங்குதன், வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஒவ்வொரு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு தெரிவிப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், மகளிர் மேம்பாடு, கல்விப் புரட்சி, சமூக நீதிக்கான செயல்பாடுகள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் அரசு செயல்படுத்தும் திட்டங்களை எடுத்து கூறினார். ஒன்றிய துணை செயலாளர் லதா, தகவல் தொழில்நுட்ப அணி குழலளரசன், தமிழ்மாறன், செல்வம், அரங்கராஜா, முருகன், சுரேஷ், சத்தியராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?