சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு

சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு

மும்பை:

ம​கா​ராஷ்டி​ரா​வில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டம், வஜாபூர் தாலு​கா​வில் உள்​ளது ஷியூர் கிராமம். இந்த கிராமத்​தில் உள்ள கோயி​லில் சஞ்​சய் பகாரே என்​பவர் சாமி​யா​ராக இருக்​கிறார்.


தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக​வும், திரு​மண​மா​காத பெண்​களுக்கு திரு​மணம் ஏற்​பாடு செய்ய முடி​யும், அகோரி பூஜை மூலம் குழந்தை இல்​லாத தம்​ப​திக்கு குழந்தை பேறு கிடைக்க செய்ய முடி​யும், ஆவி​களை விரட்ட முடி​யும் என்​றெல்​லாம் கூறி வந்துள்​ளார்.


இது​போல் பல்​வேறு மூட நம்​பிக்​கைகளை கடந்த 2 ஆண்​டு​களாக பரப்பி வந்​துள்​ளார். தன்னை தானே ‘பா​பா’ என்று அழைத்​துக் கொண்​டுள்​ளார். அதை நம்பி ஏராள​மான பக்​தர்​கள் அவரிடம் வந்​தனர். அவர்​களுக்கு ஆன்​மீக சிகிச்சை அளிப்​ப​தாக​வும் பூஜை செய்​வ​தாக​வும் கூறி கம்​பால் அடிப்​பது, காலணி​களை வாயில் கவ்விக் கொண்டு கோயிலை சுற்றி ஓடிவர செய்​வது போன்ற அத்​து​மீறல்​களை செய்​துள்​ளார்.


அத்​துடன் ஒரு கட்​டத்​தில் தன்​னிடம் வருபவர்​களை இலை, தழைகளை உண்ண சொல்லி கட்​டாயப்​படுத்தி உள்​ளார். உச்சகட்டமாக தன்​னுடைய சிறுநீரையே குடிக்க செய்​திருக்​கிறார். இதுகுறித்து கேட்​டால் இவை எல்​லாம் ஆன்​மிக சிகிச்​சை​யின் ஒரு அங்​கம் என்று கூறி ஏமாற்றி வந்​துள்​ளார். தன்​னிடம் வரும் ஆண், பெண் பக்​தர்​களை பாரபட்​சம் இல்​லாமல் சித்​ர​வதை செய்துள்​ளார்.


இந்​நிலை​யில் மூட நம்​பிக்கை எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்​வலர்​கள் சிலர், ரகசிய கேம​ராக்​கள் மூலம் ‘ஸ்​டிங் ஆபரேஷன்’ நடத்தி சஞ்​சய் பகாரே​வின் அட்​டூழி​யங்​களை ஆதா​ர​மாக சேகரித்​தனர். அவற்றை போலீ​ஸில் ஒப்​படைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று புகார் அளித்​தனர்.


அந்த அமைப்​பினர் அளித்த வீடியோ​வில் ஒரு மனிதரை படுக்க வைத்து அவர் முகத்​தின் மீது போலி சாமி​யார் சஞ்​சய் தனது காலை வைத்து அழுத்​துகிறார். பின்​னர் அவர் முகத்​தில் மஞ்​சள் வண்ண பொடியை தூவு​கிறார். இந்த பூஜைக்​குப் பின்​னர் அவரால் நிற்க கூட முடிய​வில்​லை. சிலர் தாங்கி பிடித்​துக் கொள்​கின்​றனர். ஆண், பெண்ணை சஞ்​சய் கம்​பால் அடிக்​கும் காட்​சிகளும்​ அதில்​ இடம்​பெற்​றுள்​ளன, இதுகுறித்​து போலீ​ஸார்​ எப்​ஐஆர்​ பதிவு செய்​து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%