சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: வாரத்திற்கு 3 முறை தூதுவளை ரசம் சாப்பிட்டால்...

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: வாரத்திற்கு 3 முறை தூதுவளை ரசம் சாப்பிட்டால்...


 


தூதுவளை செடியில் முட்கள் நிறைந்திருந்தாலும் அதன் இலைகள் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக தூதுவளை ரசத்திற்கு (thuthuvalai rasam recipe) அதிக மருத்துவ குணம் உள்ளது. தூதுவளையின் பயன்கள் பற்றிப் பார்ப்போம்


1. புற்று நோய் தடுக்கும்


சளி இருமல் போன்றவற்றிற்கு இது நல்லது. இதன் பண்புகள் புற்றுநோயைத் தடுக்கக் கூடியது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


2. கல்லீரலுக்கு நல்லது


கல்லீரல் புற்றுநோய்க்கு எதிராக இது செயல்படுகிறது. நாம் சாதாரணமாக குடிக்கும் நீரில் தூதுவளையை போட்டுக் குடிக்க நல்ல பலன் தெரியும்.


3. பசியைத் தூண்டும்


பசியின்மையால் அவதிப்படுபவர்கள் தூதுவளை நீரை குடிப்பது நல்லது. இதை சமைக்கும் போது சின்ன வெங்காயம் மற்றும் நல்லெண்ணை சேர்த்து சமைக்க இரட்டிப்பு நன்மை கிடைக்கும்.


4. அழற்சியைக் குறைக்கும்


அதிகாலையில் சிலருக்கு தும்மல் அழற்சி பிரச்னைகள் ஏற்படும். இதை உட்கொள்ள அவை குணமாகும்.


5. இரத்தச் சர்க்கரை கட்டுப்படும்


வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தூதுவளையை ரசமாகவோ சட்டினியாகவோ சாப்பிட சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.


6. செரிமான மேம்பாடு


அசைவ உணவை உண்ட பிறகு வெற்றிலை பாக்கு போடுவதற்குப் பதிலாக தூதுவளை ரசத்தை சாப்பிட்டால் செரிமானம் சிறப்பாக இருக்கும். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் தூதுவளை ரசம் அடிக்கடி அருந்துவது நல்லது‌


7. தொண்டை கோளாறுகள் இருக்கும் போது தூதுவளை பொடியுடன் பால் கலந்து குடிக்க தொண்டை எரிச்சல் தீரும்.


தூதுவளை ரசம் தயாரிப்பு


தேவையானவை


புளி - சிறியநெல்லிக்காய் அளவு


தக்காளி - 2


தண்ணீர்- 1கப்


அரைப்பதற்கு


சீரகம் - 1 டீஸ்பூன்


மிளகு - ஒரு டீஸ்பூன்


வரமிளகாய் -1


மல்லி விரை- 1 டேபிள் ஸ்பூன்


தூதுவளை - ஒரு கைப்பிடி


பூண்டு - 7 பல்


ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை எடுத்து அத்துடன் புளிக்கரைசல் உப்பு அரிந்த தக்காளி சேர்க்கவும். பின் மிளகு, சீரகம்,மல்லி விரை, மிளகாய் பூண்டு சேர்த்து அரைத்து இதை சேர்த்து ஒரு கைப்பிடி தூதுவளையும் சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க வைத்து நெய்யில் கடுகு தாளிக்க வேண்டும்‌. இந்த ரசம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%