கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா பிரேசில்?

கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா பிரேசில்?

கால்பந்து உலகின் மகளிர் மினி உலகக்கோப்பை தொடராக கருதப்படுவது கோபா அமெரிக்கா தொடர் ஆகும். இது தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடத்தப்படுவது ஆகும். இந்த தொட ரின் 10ஆவது சீசன் ஈகுவடார் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், இறுதி ஆட்டத்தில் பிரேசில் - கொலம்பியா நாட்டின் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 முறை சாம்பியனான பிரேசில் அணி 9ஆவது முறையாக கோப்பை யை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. அதே போன்று 4ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ள கொலம்பியா அணி இந்த முறையாவது கண்டிப்பாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது. இரு அணிகளும் கோப்பை மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில் அணி யிடம் ஏற்கெனவே 2010, 2014, 2022 ஆகிய 3 சீசன்களின் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கொலம்பியா மக ளிர் அணி கோப்பையை பறி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரேசில் - கொலம்பியா நேரம் : நள்ளிரவு 2:30 மணி (சனிக்கிழமை) இடம் : எஸ்டாடியோ ரோட்ரிகோ மைதானம், ஈகுவடார் சேனல் : கோபா அமெரிக்கா யூடியுப் சேனலில் பார்க்கலாம்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%