கொளத்தூர் தொகுதியில் ரூ.5¼கோடியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம், முதல்வர் படைப்பகம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்
கொளத்தூர் தொகுதியில் ரூ.5.24 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ரூ.3.86 கோடி செலவில் 6,200 சதுரடி நிலப்பரப்பில் தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்ட இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கொளத்தூர் கார்த்திகேயன் சாலையில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.11.37 கோடியில், சிவ இளங்கோ சாலையில் 29,514 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் 4 தளங்களுடன் கொளத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் கட்டுமானப் பணிகளை முதலமைமச்சர் நேற்று நேரில் ஆய்வு செய்து, விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?