கொரோனாவில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் இறந்தவர்கள் அதிகம் : மத்திய அமைச்சர் தகவல்

கொரோனாவில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் இறந்தவர்கள் அதிகம் : மத்திய அமைச்சர் தகவல்



புதுடில்லி : ' இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அல்லது போர்களில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர் , ' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்


இது தொடர்பாக அவர் லோக்சபாவில் அளித்த பதிலில் கூறியதாவது : மனிதர்களின் நடத்தை காரணமாக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை சோகத்துடன் கூறுகிறேன் . சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை . இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்று . எண்பது லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் . இது கொரோனா பெருந்தொற்று அல்லது போர்களில் இறந்தவர்களை விட அதிகம் ஆகும் . இளம் வயதினர் தான் அதிகளவில் இறக்கின்றனர்


எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சாலை பாதுகாப்பு பிரசாரங்களை நடத்த வேண்டும் . போக்குவரத்து விதிகளைத் தங்களின் வாகனம் ஓட்டும் முறைக்குத் தொடர்பில்லாதவை எனக் கருதி மக்கள் புறக்கணிப்பதாலேயே பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன . இவ்வாறு அவர் கூறினார் . அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் அறுபத்து ஆறு சதவீதம் பேர் பதினெட்டு முதல் முப்பத்து நான்கு வயது வரை உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது


எண்பது கிமீ . , வேகத்தில்பயணம்


பார்லிமென்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் , இரண்டாயிரத்து இருபத்து ஆறாம் ஆண்டில் , தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு இடையே கார்கள் , மணிக்கு எண்பது கி . மீ . , வேகத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கிறேன் . இதற்காக பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் வாகனத்தின் எண் மற்றும் பாஸ்ட்டாக் ஆகியவை பதிவு செய்யப்பட்டு , கட்டணம் தானாக வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்


தொழில்நுட்பம் மூலம் வாகனம் செல்லும் வேகத்தை கணக்கீடு செய்ய முடியும் . செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து மற்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்பட முடியும் . இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது குறையும் . எரிபொருள் மிச்சமாவதுடன் , அரசுக்கு ஆறு ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் . சாலைகளின் தரத்தை உயர்த்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் . தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு . மாநில நெடுஞ்சாலைகளுக்கு அல்ல . நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளுக்கு நான் பொறுப்பு கிடையாது . தேசிய நெடுஞ்சாலைகளில் மோசமான பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் , இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவார்கள் . இவ்வாறு அவர் கூறினார் . 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%