கேரளாவில் இருந்து ரெக்சின் கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கேரளாவில் இருந்து ரெக்சின் கழிவுகளை கொட்ட வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


கம்பம், நவ.3–


கேரளாவில் இருந்து தேனி மாவட்டம், கம்பமெட்டு வனப்பகுதியில் ரெக்சின் கழிவுகளை கொட்ட வந்த காரை சோதனையிட்டு வனத்துறை அதிகாரிகள் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.


கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் பகுதிக்குள் கொண்டு வந்து சிலர் தொடர்ந்து கொட்டி வந்தனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பித்த பிறகே மருத்துவக் கழிவுகள் கொட்டுவது குறைந்தது.


இருப்பினும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை, தொடுபுழா, மூவாற்றப்புழா, வண்டிப் பெரியாறு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் குப்பைகளை வாகனங்களில் கொண்டு வந்து கம்பமெட்டு அடிவார காடுகளில் கொட்டிச் செல்கின்றனர். அண்மையில் விவசாயிகள் அளித்த புகாரில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகும் குப்பை கொட்டுவது தொடருகிறது.


ரூ.10 ஆயிரம் அபராதம்


நேற்று முன்தினம் கட்டப்பனை 'ஸ்ரீராம் ரெக்சின் ஒர்க்ஸ்' என்ற கடையில் சேகரமான ரெக்சின் கழிவுகளை காரின் டிக்கியில் வைத்து உரிமையாளர் சோலை ராஜா (வயது 38) கம்பமெட்டு வனப்பகுதிக்கு கொண்டு வந்தார். சோதனை சாவடியில் வனத்துறையினர் சோதனையிட்ட போது கழிவுகளை கொண்டு வந்தது தெரிந்தது. சோலைராஜாவிற்கு வனத் துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


கழிவுகளை கொண்டு வருவோருக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் அப்போது தான் கழிவுகள் கொட்டுவதை முழுமையாக தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியு உள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%