கேந்திரிய, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 12 ஆயிரம் ஆசிரியர் காலிபணியிடங்கள்' - மத்திய அரசு தகவல்

கேந்திரிய, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 12 ஆயிரம் ஆசிரியர் காலிபணியிடங்கள்' - மத்திய அரசு தகவல்

ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தும் திட்டம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய கல்வித்துறை இணை மந்திரி ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்புர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;-


""நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மொத்தம் 7,765 ஆசிரியர் பணியிடங்களும், நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 4,323 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


பணி ஓய்வு, ராஜினாமா, பதவி உயர்வு, பணியிடமாற்றம் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் கேந்திரிய மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்களில் ஏற்படுகின்றன. தடையற்ற கல்வி செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தும் திட்டம் உள்ளது.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில்(NCERT), குரூப் ஏ கல்விப் பதவிகளில் 143 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் தற்போது 60 பணியிடங்கள் காலியாக உள்ளன."


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%