இது மார்கழி மாதம். மார்கழி மாதத்தின் 27-வது நாள் கூடாரவல்லி வைபவம் நடைபெறும். அதிலும் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்த கூடாரவல்லி வைபவம் மிக மிக விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் மார்கழி மாதம் 27ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றால், இந்த வைபவத்தை நீங்கள் நேரில் தரிசனம் செய்யலாம்.
கூடாரவல்லி என்றால் என்ன தெரியுமா. ஆண்டாள் ரங்கனை திருமணம் செய்வதற்கு மார்கழி மாதம் 2ஆம் தேதி தன்னுடைய விரதத்தை துவங்குகின்றாள். மார்கழி 27ஆம் தேதி ஆண்டாள் அரங்கனை திருமணம் செய்து கொண்டதாக, அதாவது ஆண்டாள் ரங்கனிடம் ஐக்கியமான நாள் இந்த மார்கழி 27ஆம் தேதி. இதைத்தான் கூடாரவல்லி வைபவமாக கொண்டாடுகின்றோம்.
மார்கழி மாதம் 27 நாள் நோன்பிருந்து ரங்கனை கரம் பிடித்த ஆண்டாளை, பெண்கள் வழிபாடு செய்தால் அவர்களுடைய விருப்பமும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் இந்த நாளில் ரங்கநாதரையும் ஆண்டாளையும் வழிபாடு செய்யும் போது நீங்கள் வேண்டிய வரங்கள் அப்படியே கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் ஆன பெண்களுக்கு கணவரோடு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.
மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்ததால் ஆண்டாள் விருப்பம் நிறைவேறியது. ஆண்டாள் நாச்சியார் ரங்கனிடம் ஐக்கியமானாள். நீங்கள் இந்த மார்கழி மாதம் கூடாரவல்லி அன்று விரதம் இருந்து ஆண்டாளை வழிபாடு செய்தால், உங்களுடைய விருப்பத்தை அந்த ஆண்டாள் நிறைவேற்றி வைப்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?