குழந்தை !

குழந்தை !

-கவிஞர் இரா .இரவி .


உள்ளது உள்ளபடி

உரைக்கும் காந்தி

குழந்தை !


உடைந்தது பொம்மை

உடைந்தது மனசு குழந்தை !


செல்வங்களில்

உயர்ந்த செல்வம் குழந்தை !


உலகின் முதல் மொழி

உன்னதமான மொழி

குழந்தை !


குழல் யாழ்

வென்றது

குழந்தை !


கவலை நீக்கும்

இன்பம் தரும்

குழந்தை !


பிழையாகப் பேசினாலும்

பேசுவதே அழகு

குழந்தை !


கருவில் உருவான

விசித்திர விந்தை

குழந்தை !


சாதி மத பேதம்

அறியாதது

குழந்தை !


சிரிப்புக்கு இணையான

பூ உலகில் இல்லை

குழந்தை !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%