குறவன்குளம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

குறவன்குளம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.



அலங்காநல்லூர்,ஜூலை.14.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திரர் குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் யாகசாலை ஹோமங்களை தொடர்ந்து யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக நகர செயலாளர் ரகுபதி,அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவேந்திரர் குல உறவின்முறை சங்கம்,வடக்கு தெரு குறவன்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%