குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு

குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு

குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு அமைச்சர் திறந்து வைத்தார் தேனி மாவட்டம் குமுளியில் புதிய பஸ் நிலையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜ. பெரியசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் குமுளியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கடந்த 2023இல் தமிழக முதல்வர் 7.50. கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார் ஆனால் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை யார் மேற்கொள்வது என்பதில் கூடலூர் நகராட்சி போக்குவரத்து துறை வனத்துறை இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்தது துறை ரீதியாக நடந்து பேச்சு வார்த்தையில் போக்குவரத்து துறை சார்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது இதற்காக ரூபாய் 5.5. கோடி திட்ட மதீப்பீடு தயார் செய்யப்பட்டது கட்டுமான பணிகளை துவங்குவதற்காக கடந்த 2023 செப்டம்பர் 11 இல் பூமி பூஜை நடத்தப்பட்டது இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது ஆனால் மின் இணைப்பு தனியாக பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் முடிவடைந்து வியாழக்கிழமை பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா காணப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது இந்த பஸ் நிலையத்தை தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜ. பெரியசாமி போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ். சிவசங்கர் ரூபாய் 5.5. கோடி மதிப்பீட்டில் பணி மனையுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி ஆ மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்கள் இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை கம்பம் வனிதா நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%