குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை தாய் ‘பிரியாணி’ அபிராமி, கள்ளக்காதலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை தாய் ‘பிரியாணி’ அபிராமி, கள்ளக்காதலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

காஞ்சிபுரம், ஜூலை 24–


குன்றத்தூரில் 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலைச் செய்த வழக்கில் தாய் அபிராமி, கள்ளக்காதலன் ஆகியோருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் (7) என்ற மகனும், காருனிகா (4) என்ற மகளும் இருந்தனர். அஜய், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.


டிக் டாக்கில் பிரபலமான அபிராமி, அந்த பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் தொடர்ந்து பிரியாணி வாங்கி வருவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். அந்த வகையில் அந்த பிரியாணி கடைகள் பணியாற்றிய மீனாட்சி சுந்தரம் என்கிற சுந்தரம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் அபிராமியும் சுந்தரமும் சென்னையைவிட்டு கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேற அவர்கள் எடுத்த முடிவு தான், கொடூரத்தின் உச்சமாக மாறியது. கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற அபிராமி முடிவு எடுத்தார்.


பிரியாணி அபிராமி


கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குன்றத்தூரில் உள்ள மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதைப் பாலில் கலந்து மூன்று பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். ஆனால் வீரியம் இல்லாததால் கார்னிகா மற்றும் உயிரிழந்து உள்ளார். வழக்கம்போல் விஜய் மறுநாள் காலை எழுந்து வேலைக்கு சென்றுள்ளார். அதேபோன்று மகன் அஜய் மயக்கத்தில் இருந்து உள்ளார். அபிராமி அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். அதன் பிறகு அஜய் உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இது தொடர்பான ஆடியோக்கள் அப்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அபிராமி கேரளாவிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அபிராமிக்கு பிரியாணி அபிராமி என பெயர் வைக்கப்பட்டு, கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.


சாகும் வரை சிறை தண்டனை


2018ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றம் துவங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபிராமி மற்றும் காதலன் மீனாட்சிசுந்தரம் இருவரும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.


ஏற்கனவே ஏழு ஆண்டுகள் சிறையில் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு அபிராமி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரும் கோரிக்கைவைத்தனர். அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


சிறிது நேரத்திற்கு பின்னர் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலைச் செய்த தாய் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.


முன்னதாக நீதிமன்றம் வளாகத்திற்கு வந்திருந்த அபிராமி துப்பட்டாவால் முகத்தை மூடி அழித்துவரப்பட்டார். ஏன் குற்றவாளிக்கு துப்பட்டாவை வழங்கினார்கள் என காவலர்களை பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார் . துப்பட்டாவால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்ய நேரிடும், இதனை அனுமதிக்க கூடாது என காவலர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%