குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் ; ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் ; மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
புதுடில்லி : ஆண்டுக்கு இரண்டு லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை கைவிடுவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது
பார்லியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி , கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை கைவிட்டுள்ளனர் . குறிப்பாக இரண்டாயிரத்து இருபத்து இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர் . இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு வரையில் சுமார் இருபது லட்சம் பேர் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிட்டு விட்டு , வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர்
இரண்டாயிரத்து பதினொன்றில் இருந்து இரண்டாயிரத்து இருபத்து ஒன்றாம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒன்று . இருபது லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை , இரண்டாயிரத்து இருபத்து இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு , ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் பேராக அதிகரித்துள்ளது
இதற்கான காரணங்கள் தனிப்பட்ட உரிமை . பலர் தங்களின் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்கின்றனர் . உலகம் முழுவதும் பெருகி வரும் வேலைவாய்ப்பு காரணமாக , திறன் படைத்தவர்கள் , வெளிநாட்டு வாய்ப்புகளை தேடி செல்வது ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு காலம் முதலே இருந்து வருகிறது . ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து இரண்டாயிரத்து இருபதில் இது புதிய உச்சத்தை எட்டியுள்ளது , இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய அரசியலைப்பு சட்டத்தின்படி , மற்றொரு நாட்டின் குடியுரிமையை தானாக முன்வந்து பெறும் போது , இந்திய பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர் தானாகவே குடியுரிமையை இழக்கிறார் . இதுஒருபுறம் இருக்க , அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் குடியுரிமை பெறுபவர்களுக்கு , ஓட்டு போடும் உரிமை , அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்படுகின்றன
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?