கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
Aug 31 2025
167
சேலம், ஆக.27-
எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றிலிருந்து தொழி லாளியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட முண்டாச்சியூர், காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான ராமசந்திரன் அடிக் கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக் கூறப்படு கிறது. இந்நிலையில் புதனன்று மாக்கனூர் கிராமம், எலந்ததோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவ ரது விவசாயக் கிணற்றில் ராமச்சந்திரன் சடலம் மிதப்ப தாக பூலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராமச்சந்திரனின் உடலை மீட்டு எடப் பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரன் மது போதையில் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந் தாரா? அல்லது முன் பகையால் அவரை யாரேனும் அடித்து கிணற்றில் வீசினார்களா? உள்ளிட்ட கோணங் களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?