மருத்துவமனை தேடுகிறாய்
உடம்பு வலிக்காய்..
உன் சிடுசிடு முகத்திற்கே
ஒரு வார்டு திறக்க வேண்டும் போலுள்ளது!
சிரிப்பைத் தொலைத்து
சிடுமூஞ்சியை
வளர்த்தவனே...
உன் முகமே
மற்றவர்களின் முழுநாள்
கெட்டுப் போக
மூலகாரணம்!
சூரியன் உதித்தாலும்
உனக்கு இருட்டு,
மழை பெய்தாலும்
உனக்கு சலிப்பு,
உலகம் உன் மனநிலைக்கே
வேலை செய்யணுமோ?
சிரிப்பு சுகாதாரம்,
சிடுமூஞ்சி தொற்றுநோய்!
புரிந்து கொண்டு
புன்னகை வளர்த்து!
உன் கோபத்துக்கு
மருந்தே இல்லையென்கிறாய்!
இருக்கு நண்பா,
பொறுமை லேகியத்தை
பயன்படுத்து
சுடுமுகம் சுந்தரமுகமாகும்!
ஒரு முறை சிரித்தால்
உன் முகத்தில்
மனிதன் தெரிவான்!
சினத்தில் புன்னகைத்தான்
உன் முகத்தில்
இறைவனே தெரிவான்!
_-------

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?