காசோலை மோசடி வழக்கு: இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை: சென்னை கோர்ட் தீர்ப்பு
திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பேஸ்மேன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம், கடந்த 2016-ம் ஆண்டு ரூ.35 லட்சம் கடனாக பெற்றுள்ளது. கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.48 லட்சத்து 68 ஆயிரம் வந்துள்ளது. இதற்காக அளிக்கப்பட்ட காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக கூறி பேஸ்மேன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் கோர்ட் நீதிபதி மகாலட்சுமி, இயக்குனர் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகி யோருக்கு தலா ஒராண்டு சிறை தண்டனை விதித்து, கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து திரும்ப கொடுக்கா விட்டால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க லிங்குசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?