சுதந்திரத்தின் சின்னமாய்
சிறகு விரித்து
பறக்கும் காகம்...
அடிமையின் அடையாளமாய்
சிறை கூண்டில்
சிக்கிய கிளி...
"ஏன் இங்கே பூட்டப்பட்டாய்?"
என்று கேட்டது காகம்,
"நான் பேசுவதனால்..."
என்று சொன்னது கிளி
பேசும் சொற்கள் சிலசமயம் மனதில் சுவர்கள் எழுப்பும்
மெளனம் காக்கும் மனம்
உயர்ந்த மலைபோல் உயரும்
வாயின் வலிமை
வாழ்வை முடக்கும்
மௌனத்தின் விலை
விடுதலை தரும்
👉 பேசும் சொல் சிலநேரம் சிறையாகும்,
மெளனம் மனிதனை சுதந்திரமாக விடும். 🌿
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%