பொது இடங்களில்
புகைப்பது
பயணங்கள் போது
பெண்களை உரசி
அற்ப சுகம் காண்பது
பெண்களின் இருக்கையை
அபகரிப்பது
இந்த மன மலங்களை
அகற்றாமல் வாழ்வது
நாகரிகமான
மனிதவாழ்க்கையா...?
பூங்காக்களில் காதல்
களியாட்டம் புரியும்
ஈனப்பிறவிகளே
உங்களின் வயதின்
அழுக்கை துவைக்க
ஒன்றுமறியா அரும்புகள்
விளையாடும் பூங்காவா
கிடைத்தது..?
பணம் கொடுத்து
வாக்காளர்களை விலைக்கு
வாங்கும் வெள்ளைகளே
உங்கள் மனங்களை
வெள்ளாவியில்
வேகவையுங்கள் சமுதாயம்
வெளுத்து பளபளக்கும்.
கவிஞர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%