கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிய இளைஞர் குற்றவாளியாக அறிவிப்பு
Jul 13 2025
12

ஜோலார்பேட்டை:
கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணை கீழே தள்ளி விட்ட கொடூர சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்தது. கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்ப வரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்த இவர் கோவை-திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 6 பெண்களும் இறங்கிய பிறகு, பெட்டியில் ஒரு நபர் ஏறி னார். ரயில் புறப்பட்ட உடனே அந்த இளைஞர் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். உதவிக்காக கூச்சலிட்டபோது, அவர் அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் கரு கலைந்தது. கைது செய்யப்பட்ட ஹேமந்த்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டான். திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசார ணையில் 28 வயதான ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதி பதி அறிவித்துள்ளார். குற்றத்திற்கான தண்டனை ஜூலை 14 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?