கர்நாடகாவில் யுபிஐ-க்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் ஸ்கேனர்கள் கிழித்தெறியப்பட்டது

கர்நாடகாவில்  யுபிஐ-க்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் ஸ்கேனர்கள் கிழித்தெறியப்பட்டது

கர்நாடக மாநிலம் காவேரி மாவட் டத்தில் உள்ள பசவ நகரைச் சேர்ந்தவர் ஷங்கர் கவுடா ஹடி மணி (51). காய்கறிக் கடையை நடத்தி வரும் இவருக்கு, அண்மையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினர். அதில்,“கடந்த 4 ஆண்டு களில் யுபிஐ டிஜிட்டல் முறையில் ரூ.1.63 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். இதற்கு நீங்கள் ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஷங்கர் கவுடாவைப் போல கர்நாடகாவில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு வியா பாரிகளுக்கு லட்சக்கணக்கில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதுதெடர்பான விஷயம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ கர்நா டகாவின் காவேரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் யுபிஐ-க்கு எதிராக போ ராட்டம் தொடங்கியுள்ளது. பெரும்பா லான வியாபாரிகள் யுபிஐ பண பரி வர்த்தனையை முற்றிலுமாக நிறுத்தி யுள்ளனர். சில இடங்களில் வியாபாரி கள், இளைஞர்கள் யுபிஐ வேண்டாம் என்று கூறி, அதற்கான ஸ்கேனர்கள் கிழித்தெறிந்து வருகின்றனர். இத னால் யுபிஐ-க்கு எதிராக போராட்டம் மாநிலம் முழுவதும் பரவ வாய்ப்புள் ளது. முன்னதாக ஜிஎஸ்டி நோட்டீஸை கண்டித்து புதன்கிழமை அன்று காவேரி மாவட்டத்தில் மாநில அளவிலான வியா பாரிகள் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%