கரூர் பலி: தார்மிகப் பொறுப்பு தவெகவுக்கே! - டிடிவி. தினகரன்
Oct 06 2025
40
கரூர் விபத்து தொடர்பான தார்மிகப் பொறுப்பு தவெகவுக்குத்தான் உள்ளது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் விபத்து தொடர்பான தார்மிகப் பொறுப்பு தவெகவுக்குதான் உள்ளது. அதன் தலைவர் விஜய் ஏற்றிருந்தால், நீதிமன்றம் கூட கண்டனம் தெரிவித்திருக்காது. கரூர் விபத்து பற்றி சீமான் கூட நிதானமாகவும் சரியாகவும் பேசினார். பதவி ஆசையில் எடப்பாடி பழனிசாமி வாதமிடுக்கிறார்
ஆட்சிக்கு வர வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்றாலும், அமமுக அவரை வீழ்த்தாமல் விடாது. எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. அவர் அப்படித்தான் பேசுவார் என்பதும் தெரியும். அதிமுக மீதோ, பாஜக மீதோ எந்த பகையும் இல்லை, ஒரே பிரச்னை பழனிசாமிதான்.
உக்ரைனில் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்
கரூர் துயரச்சம்பவத்தில் முதல்வர் நிதானமாகவும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டார். தவெக-வின் வாதங்கள்யாவும் பொறுப்பற்ற தன்மையைதான் காட்டுகிறது. இச்சம்பவத்தில் அண்ணாமலை பேசியதில்கூட, ஒரு நெருங்கிய நண்பனாக எனக்கு வருத்தம் உள்ளது. கரூர் சம்பவத்தில் சதிக்கே வேலையில்லை. இது விதியோடு சதிதான்.
ஜாதி, மதம் கடந்துதான் தமிழகம் மக்கள் அனைவரையும் பார்பார்கள். திமுக ஆட்சிக்கு ஆதராக பேசவில்லை. ஆனால் கரூர் விவகாரத்தில் சரியாக செயல்படுகிறது. தவெக திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. இது விபத்துதான். அனுபவம் குறைவால் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இந்த சம்பவத்தில் பாஜக அரசியல் செய்வது வருத்தமாக உள்ளது என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?