தாம்பரம், ஜன.9-
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலைக்கு அருகேயுள்ள ரயில் பாதைக்கும் தெற்கே ஏராளமான புறநகர் பகுதிகளும் - குடியிருப்புகளும் உள்ளன.அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். இதன் மூலம், ராதாநகர், ஜமீன் பல்லாவரம், போஸ்டல் நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம் மற்றும் மேடவாக்கம் பகுதி பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் பெருமளவில் பயனடைவார்கள்.
விழாவில் அமைச்சர் அன்பரசன், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்ஆர் ராஜா, துணைமேயர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?