" மனம் என்பது
புதிரான கதை
இலக்கு என்பது
தொடர் கதை ..."
ஆசை என்பது
பெருங் கதை
இளமை என்பது
காமக் கதை ..."
முதுமை என்பது
உண்மைக் கதை
இழப்பு என்பது
கண்ணீர்க் கதை ..."
தோல்வி என்பது
சந்தேகக் கதை
வாழ்க்கை என்பது
புரிந்த கதை .... "
மனைவி என்பது
புரியாத கதை
குடும்பம் என்பது
குழப்பமான கதை ..."
திருமணம் என்பது
கதைக்குள் கதை
பெண்களின் மனது
முன் கதை சுருக்கம் ..."
காதல் என்பது
கனவுக் கதை
கைக்கு எட்டாதது
துயரக் கதை... "
பெண்களை
கண்டால் வருவது
ஜொள்ளுக் கதை..."
பெண்களை
வர்ணித்து வருவது
அர்த்தம் இல்லாத
கதை ... "
கனவு கண்டால்
புதுக் கதை
மொத்தத்தில்
மண்ணுலக
வாழ்க்கை என்பது
விடுகதை ..."
- சீர்காழி .ஆர். சீதாராமன் .
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?