०००
(1)
மானுக்குப் புற்கள்
புலிக்கு மான்கள்
இரண்டுக்கும் காடே வாசம்
காடுகள் சுயம்பு.
(2)
ஆதிமனிதன் இயற்கையோடு
வாழ்ந்தான் நோயில்லை.
இயல்பற்ற வாழ்வு இன்று
நோயற்றோர் இல்லை.
(3)
முல்லைச்செடியில் முல்லைப்பூ
பூசணிக்கொடியில் பூசணி
மானுக்குக் குட்டிமான்
முரண்கள் அழகன்று.
(4)
உழைப்பாளி உழைக்கிறான்
வயிறாரச் சாப்பிடுகிறான்
முறையற்று ஈட்டுபவன்
மூன்றுவேளையும் மாத்திரைகள்.
(5)
இன்றும் செருப்பைத்
தைத்துப் போடுபவர் சிலர்
திறமையாளன் எப்போதும்
வேலையிலே கவனமானவன்.
(6)
பசித்து உண்ண வேண்டும்
படித்துயர வேண்டும்
அறத்தை ஈட்ட வேண்டும்
அன்பால் வாழ்வு.
(7)
காகித கப்பல் நீரிலோடும்
பயணிக்க உதவாது
குதிரையில் பயணிக்கலாம்
சாட்டை வேண்டும்.
(8)
எப்போதும் கைப்பேசி யுடன்
எதார்த்தத்தின் கேடு
எலக்ட்ரானிக் இல்லா உலகில்
எல்லாமும் வரங்கள்.
(9)
ஒரு குழந்தை வளர்க்க
ஓராயிரம் பாடுகள்
பெற்றுக் குவித்தனர்
பேராற்றல் வளம்.
(10)
கல்வியின் பெருமை
பீற்றுதல் ஒழித்தல்
வாழ்தலின் பேறு
உறவுகள் பேணுதல்.
ஹரணி
தஞ்சாவூர்-
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?