பெண்மையின் புதையல்
கருவறையில் தொடங்கி கல்லறை வரை உடனிருக்கும்
பருவ வயதுப் பாதுகாவல்
குருதியில் கலந்த உணர்வால்
புவியில் என்றும் பாதுகாப்பு
நால்வகைக் குணத்தில்
நடை பயின்று
நானிலத்தில் உயர்வு பெற
நம்மோடு பயணிக்கும் நல்லுணர்வு
உடலில் தோன்றி
உணர்வில் வெளியாகும்
விழிகளில் தோன்றும் நாணம்
பொலிவில் கூடுதல் அழகாகும்
பெண்மைக் குணத்தில் ஒன்றெனினும்
ஆணுக்கும் அதுவே பொதுவாகும்
வெட்கத்தில் நாணம் தோன்றின் நலமாகும்
செய்யும் தவறால்
நாணம் வந்தால்
நம் வாழ்வின்
பெருந்துயர் அதுவாகும்
தவறு செய்வதில்
நாணம் கொண்டு
நலமாய் வாழ
வழி காண்போம்.
*************************************
தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%