கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா.........

கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா.........

 திருவண்ணாமலை மாவட்டம் 24.08.2025 கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் தனியார் மண்டபத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கனடா நாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவர் கௌரிசங்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். விழாவில் 33 ஆண்டுகளுக்கு முன் ஒண்ணுபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பள்ளி காலத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக அனைவரும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் சந்திப்பை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மகிழ்ந்தார்கள். தொடர்ந்து அனைவருக்கும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%