திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மெயின் பஜாரில் உள்ள கடைக்குள் அத்துமீறி நுழைந்து பொருட் கள் திருடிய இருவருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அங்கு முருககனி என்பவர், கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான கடையை ரூ.7 லட்சம் கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் ஒத்திக்கு வாங்கி, “சோபியா” என்ற பெய ரில் செப்பல் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். முருககனியிடம் கார்த்திக் குடும்ப செலவுக்காக சுமார் ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தாததால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கார்த்திக் தனது நண்பர்கள் காதர் ஒலி, பஞ்சவர்ணம் ஆகியோருடன் புதன்கிழமை மாலை அந்தக் கடைக்குள் புகுந்து, சிறியதும் பெரியதுமான 85 அலுமினிய கம்பிகளை திருடி காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முருககனியை குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். பின்னர் அவர் தனது நண்பர்களின் உதவியுடன் கார்த்திக் மற்றும் காதர் ஒலியை பிடித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பஞ்சவர்ணம் எனும் நபர் தப்பியோடினார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?