ஒரு சிலையின் பயணம் !

ஒரு சிலையின் பயணம் !



கல்யாண மண்டபத்தை அடைந்த இளங்கோவன் அந்தக் காட்சியைக் கண்டதும் ஆடிப்போனார். மேனேஜர் சொன்னது போல் இடப்பக்கம் அலங் காரத்திற்காக வைத்திருந்த வாழை மரம் இடிவிழுந்து கருகிப்போய் வலப்பக்கம் நின்றிருந்த சிலையின் காலடியில் விழுந்திருந்தது. கனம ழையும் இடி மின்னலும் இப்படியொ

ரு அசம்பாவிதத்தைஉண்டுபண்ணும்

என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஆனால் வலப்பக்கம் இருந்தவாழைம

ரமும் சிலையும் எந்தவித சேதாரமும்

இல்லாமல் காணப்பட்டது.


கல்யாணமண்டபம் திறக்க இன்னும்

இரண்டேநாள்தான் இருந்தது.


மொபைலில் மனைவியை தொடர்பு

கொண்டார் இளங்கோ " காயத்ரி அலங்காரத்துக்காக வச்சிருந்த ஒரு வாழை மரம் இடி விழுந்து கருகிப் போச்சு..." விசனத்துடன் சொன்னார்.


இடைமறித்தாள் காயத்ரி " இது ஒரு

கெட்ட சகுனம்ங்க. காரணம் நீங்க நேத்து வாங்கி வந்த அந்த சிலை தான். சிலையோட ராசி சரியில்ல. மொதல்ல சிலையை அப்புறப்ப டுத்துங்க. இல்லேன்னா அசம் பாவிதங்கள் தொடர்ந்துக்கிட்டே

இருக்கும்." 


" சரி " மொபைலை அணைத்த இளங்கோவன் , " மேனேஜர்.. இதை அப்புறப்படுத்துங்க. வேற ஒரு வாழை மரம் கட்டிடுங்க. அப்புறம்...இந்த சிலை இனி இங்கிருக்கக்கூடாது...." 


"சார்..எங்க சார் கொண்டுபோறது ?" 


" தூக்கி வெளியே கெடாசுங்க. இந்தச்

சிலை வந்தப்புறம்தான் இப்படி நடந்தி

ருக்கு !" எனக் கூறிவிட்டு காரில் ஏறிப்

புறப்பட்டார் இளங்கோ.


' அடப்பாவிங்களா ! நேத்து சாயந்தரம்

உன் பெண்டாட்டி மகன் எல்லாரும் சேர்ந்து என்னைப் பாராட்டுனீங்க ! என்னோட செல்பி வேற எடத்துக் கிட்டீங்க ! இப்ப இடி விழுந்து வாழை மரம் கருகிப் போனதுக்கு நான்தான் காரணம்னு எம்மேல பழி போடறீங்க. உங்களுக்கு நாக்கு எப்படி வேணா லும் புரளும்போல இருக்கு ! 'சிலை மனத்தில் பொருமியது.


அடுத்த சில கணங்களில் சிலை பிளாட்ஃபார்முக்கு இடம் பெயர்ந்தது. துக்கம் துக்கமாய் இருந்தது சிலை க்கு. தான் பேசாமல் தன்னைச் செதுக் கிய ஸ்தபதிக்கிட்டேயே இருந்திரு க்கலாம். இப்படி வந்து அவமானப் பட்டிருக்க வேணாம்என நினைத்தது.


அடுத்த சில நாளில் சினிமா ஸ்டூடியோஅதிபர் கோதண்டராமனின் ஸ்டூடியோவுக்கு புலம் பெயர்ந்தது சிலை. அவமானம் தொலைந்து நிம்மதி ஆட்கொண்டது சிலைக்கு.


ஆனால் அங்கும் அதன் இருப்பிடம் நிரந்தரம் ஆகவில்லை. ஒரு திரை ப்படத்திற்காக ஸ்டூடியோவின் நான் காவது தளத்தில் ஐந்துலட்ச ரூபா ய்க்கு போடப்பட்டிருந்த செட் வீணா கிப்போனது. தலையில் கை வைத்து க்கொண்டார் கோதண்டராமன். சொந்தத்தில் படம் எடுக்க பூஜை

போட்டும் ஷூட்டிங் தொடரமுடியாத நிலைமை ! அடிமேல் அடிவிழ துவண் டுபோனகோதண்டராமன் கடைசியில் சிலை வந்தபிறகுதான் இப்படி நொடி த்துப்போகும்படி ஆயிற்று. சிலை யோட ராசி சரியில்லை என்று நினை த்தார். உடனே சிலை மறுபடியும் பிளாட்ஃபாமுக்கு வாசம் புகுந்தது. இந்தத் தடவை சிலையை ஓர் ஓரமாக படுக்கவைத்துவிட்டார்கள்.


' அடேய்...என்னை ஏண்டா படுக்க வச்

சீங்க ? பேசாமல் குழி தோண்டி என் னைப் புதைக்க வச்சிருக்கலாம். ' இரண்டாவதுதடவை பட்ட அவமானம் சிலைக்குத் தாள முடியவில்லை .


மூன்றாவதாக சரவணன் வந்தான். சிலையைப் பார்த்து மயங்கினான். இவ் வளவு அழகான சிலையை யார் கொண்டு வந்து இங்கு போட்டார் கள் ?.மனத்தில் வியந்தவன் தன் கடைக்கு எடுத்துச் செல்ல திட்டமி ட்டான்.


இதையறிந்த சிலை , ' அப்பா..நீ மூணாவது ஆள் ! நீயாவது என்னை நிரந்தரமாக வச்சிப்பயா ?' பரிதாப மாக மனத்தில் கேட்டுக்கொண்டது.


அடுத்த சில நிமிடங்களில் தன் கடைக்கு முன்னால் சிலையைக் கொண்டு சென்று வாசலில் வைத்தான்..


சில நாட்களில் சோர்ந்துபோயிருந்த

சரவணனின் வியாபாரம் நன்கு சூடு

பிடிக்கத் தொடங்கி சக்கை போடு போட்டது. சிலைக்குப் பெருமை பிடிபடவில்லை. தான் சரியான இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என மகிழ்ந்தது. இப்பொழுது கொஞ்ச நாளாக சிலை உதட்டில் லேசாக புன்சி ரிப்பு தென்படுவதை காணலாம்.



வி.கே.லக்ஷ்மிநாராயணன்

                      

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%