ஐ.பி.எல்.: பெங்களூரு அணியை ரூ.17 ஆயிரம் கோடிக்கு விற்க முடிவு
Nov 08 2025
10
பெங்களூரு, நவ.7-
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். என்ற புதுமையான 20 ஓவர் கிரிக்கெட் லீக்2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. கடந்த ஜூன் 3-ந்தேதி நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. அத்துடன் அந்த அணிக்காக ஆரம்பம் முதலே விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலியின் நீண்ட கால ஏக்கமும் தணிந்தது.
இதனால் பெங்களூரு அணியின் வெற்றியை பிரமாண்டமாக கொண்டாட பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நெரிசலில்சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெங்களூரு அணி நிர்வாகம் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் அந்த அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்கள் நடக்கக்கூடிய சின்னசாமி ஸ்டேடியம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து பெங்களூரு அணி விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அது இப்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு அணியின் தற்போதைய மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.17,240 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில் பெங்களூரு அணியை வாங்க அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?