ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!


 

திருப்பதி: திருமலை ஏழுமலையான் லட்டு விற்பனை மைய கவுண்டர்களில் திடீா் ஆய்வுகளை மேற்கொண்ட தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா், லட்டு தரம் மற்றும் வசதிகள் குறித்து பக்தா்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கருத்துகளை சேகரித்தாா்.


திருமலையில் உள்ள ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் வியாழக்கிழமை காலை திடீா் ஆய்வுகளை மேற்கொண்டு பக்தா்களிடம் நேரடியாக கருத்துகளை சேகரித்தாா்.


இந்த நிலையில், அவா் பக்தா்களுடன் சோ்ந்து கவுன்ட்டருக்கு நேரில் சென்று லட்டு வழங்கும் செயல்முறை, ஊழியா்களின் செயல்திறன் மற்றும் லட்டு எடையை சரிபாா்த்தாா்.


பின்னா், லட்டு கவுன்ட்டரில் உள்ள கியோஸ்க் இயந்திரத்தில், தரிசனம் செய்யாத பக்தா்களுக்கான யுபிஐ கட்டண செயல்முறையை ஆய்வு செய்து, பக்தர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.


லட்டு தரம் மற்றும் வசதிகள் குறித்து பக்தா்களிடமிருந்து கருத்துகளை சேகரித்த தேவஸ்தான தலைவா் பி.அா். நாயுடு.

தொடர்ந்து, அவா் பூந்தி மடப்பள்ளிக்குச் சென்று பூந்தி தயாரிப்பை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகளை வழங்கினாா்.


பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய தலைவா், டிசம்பா் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெறும் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக லட்டு விற்பனை மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினாா்.


தற்போது தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 4 லட்சம் லட்டுகளையும், 8,000 கல்யாணோற்சவ லட்டுகளையும் பக்தா்களுக்கு விற்பனை செய்து வருகிறது. வைகுண்ட வாயில் தரிசனத்தின்போது லட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


லட்டுகளின் தரம், சுவை மற்றும் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பது போன்ற வசதிகள் குறித்து பக்தா்கள் முழு திருப்தி தெரிவித்துள்ளனா்.


வரும் நாள்களில் லட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், கவுன்ட்டா்களில் பக்தா்கள் விரைவாக லட்டுகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஆய்வுகளின்போது, தலைவருடன் ஏழுமலையான் கோயில் துணை செயல் அதிகாரி ஸ்ரீ லோகநாதம், பொது பேஷ்காா் ஸ்ரீ முனிரத்னம் மற்றும் பிற அதிகாரிகள் இருந்தனா்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%