எடப்பாடி பழனிசாமி சுயநல அரசியல் செய்கிறார் கருணாஸ் கடும் விமர்சனம்
Sep 11 2025
81
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி சுயநல அரசியல் செய்கிறார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடுமையான விமர்ச னங்களை வைத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றும், பிரிந்தவர்கள் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் கூறி 10 நாட்கள் கெடு விதித் திருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை நீக்கும் அதிரடி நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கரு ணாஸ், “ஜெயலலிதாவின் கனவை பள்ளம் தோண்டி புதைக்கக் கூடிய வேலையை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். 2026-இல் திமுகவின் ஆட்சிதான் உருவாகும். அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் எனக் கூட தெரியாது. ஆனா லும் அந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன். சுயநல அரசியலை செய்து கொண்டி ருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கருணாஸ் கடுமை யாக விமர்சித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?