
புதுதில்லி:
மதுரை மாநகராட்சி வரி மோசடி புகார்களை சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மாநகராட்சியில் சில கட்டடங்களுக்கு வணிக வரிக்குப் பதிலாகக் குடியிருப்பு வரியாக மாற்றி நிர்ணயம் செய்தது, குடியிருப்புக் கட்டடங்களுக்கு வரிக் குறைப்பு செய்தது என வரி ஏய்ப்பு வாயிலாகப் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தை ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்புக் குழுவுக்குப் பதிலாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என கே.கே. ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந் தார். இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை மையிலான உச்சநீதிமன்ற அமர்வு திங்களன்று தள்ளுபடி செய்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?