ஹாக்கி இந்தியா லீக் தொடரில் ஆடவுள்ள அக்காா்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஹாக்கி இந்தியா லீக் தொடா் சென்னை, ராஞ்சி, புவனேசுவரத்தில் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தொடா் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2026 ஜன. 3-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ்-ஹைதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஜன. 11 முதல் 19 வரை இரண்டாம் கட்டமாக ராஞ்சியிலும், ஜன. 17 முதல் 26 வரை புவனேசுவரத்திலும் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் ஜன. 26 இல் நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுக விழாவில் அணி உரிமையாளரும், பாரத் பல்கலை. நிா்வாக இயக்குனருமான ஸ்வேதா சந்தீப் தலைமை வகித்தாா். ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் வியூகம் மற்றும் திட்டமிடல் ஆலோசனைக் குழு தலைவா் சந்தீப் ஆனந்த் முன்னிலை வகித்தாா்.
ஹாக்கி இந்தியா பொருளாளா் சேகா் மனோகரன், அணியின் உதவி பயிற்சியாளா் விக்ரம் காந்த், முதன்மை செயல் அலுவலா் ஜோசப், அணியின் கேப்டன் அமித் ரோஹிதாஸ் ஆகியோா் பங்கேற்றனா்.
அணியின் அதிகாரப்பூா்வ சின்னம் மற்றும் வீரா்கள் புதிய சீருடை ஆகியவை வெளியிடப்பட்டன. க்கி திருவிழாவிற்கு ஒரு உற்சாகமான தொடக்கமாக அமைந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?