மூணாறு: மூணாறில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகி வருவதால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மூணாறில் நவம்பரில் குளிர்காலம் துவங்கிய நிலையில், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே டிச.,15ல் உறைபனி ஏற்பட்டது. அதன் பிறகு டிச.,21 முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக உறைபனி ஏற்பட்டது. அதனால் புல் வெளிகள், செடி, கொடிகள் ஆகியவை தீயில் எரிந்தது போன்று கருகின.
அதேபோல் தேயிலை செடிகளையும் உறைபனி விட்டு வைக்கவில்லை. தேயிலை செடிகள் மீது படர்ந்த உறைபனியால் செடிகள் கருகின. இப்பகுதியில் பிரபல தேயிலை கம்பெனியான கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான எஸ்டேட்டுகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட எக்டேரில் தேயிலை செடிகள் கருகின. குறிப்பாக கன்னிமலை, சைலன்ட்வாலி, செண்டுவாரை, நல்ல தண்ணி, சிவன்மலை, தேவிகுளம் ஓ.டி.கே., ஆகிய எஸ்டேட்டுகளில் கூடுதலாக தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டன.
அதேபோல் ஹாரிசன் மலையாளம் கம்பெனிக்கு சொந்தமான லாக்காடு உட்பட பல்வேறு எஸ்டேட்டுகளில் 30 எக்டேருக்கும் அதிகமாக தேயிலை செடிகள் கருகின. தேயிலை செடிகள் கருகிய பகுதிகளில் பச்சை தேயிலை பறிக்க இயலாது என்பதால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?