
மனிதனுக்கு வாழ்வில் இரண்டு கோட்பாடுகள் வேண்டும்.
ஒன்று மனத்தூய்மை,
மற்றொன்று மன அமைதி.
இந்த இரண்டும் பெற
நல்ல எண்ணம் வேண்டும்.
கேட்பதென்பது மனிதனது உரிமை. கொடுப்பது என்பது இறைவனுடய தன்மை.
கிடைதத்தைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வது தான் மனித வாழ்வின் பூர்நாத்துவம். இதைப் பெற இறைவன் அருளைப் பெற வேண்டும்.
இறைவனிடம் மனம் ஈடுபடுவதைப் பொறுத்து விதியின் கொடுமை குறையும்.
_*காதோரம் நரை..*_
_*கண்களுக்குக் கீழே சுருக்கம்..*_
_*சிறிதும் இரக்கமே இல்லாமல்*_
_*உண்மையைப் பேசுகிறது "கண்ணாடி"*_
_*நாம் வாழுகிற வாழ்க்கை இயற்கையின் கொடை.*_
_*இந்த வாழ்க்கையை
வாழத்தெரியாதவர்களே அதிகம்*_
_*இந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள் மிகக் குறைவு.*_
_*கோபமும், வெறுப்பும், மன*_ _*அழுத்தமும் அதிகமாகிக் கொண்டு இருப்பதற்கு காரணம் வாழ்க்கையை*_
_*நேசிக்காததே அடிப்படை காரணமாகும்.*_
_*கட்டுப்பாடு என்பது கஷ்டங்கள் கிடையாது.*_
_*அது நம்மை* *மேம்படுத்துவதற்கு*_
_*நாமே ஏற்படுத்திக் கொள்வது.*_
_*அளவாேடு சிந்தித்தால் சிந்தனைவாதி.*_
_*அளவுக்கு மீறினால் சிந்தனையே வியாதி.*_
_*பாராட்டுதலோ அறிவுரையோ தோன்றுவதைச் சொல்லி விட்டு, அமைதியாக இருக்க வேண்டும்.
அதன் பலன் என்ன என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம்.*_
_*முடிந்த வரை உங்கள் வேலையை சிறப்பாக செய்து விடுங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தானாகவே கிடைத்து விடும்.*_
_*அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டு உடனே எந்த முடிவும் எடுக்காதீர்கள். நீங்கள் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பதே நல்லது.*_
என்ன செய்தார்கள்
என்பதில் இருக்கும்
ஆர்வம்...
ஏன் அப்படிச்
செய்தார்கள் என்பதை அறிவதில்
இருப்பதில்லை.
_*பிறரின் முன்*_ _*வாழ்ந்துக் காட்ட நீங்கள் பிறக்கவில்லை.*_
_*உங்களின் மாபெரும் சக்தியை உணர்ந்து உச்சத்தைத் தொடுவதற்குப் பிறந்துள்ளீர்கள்.*_
✍️முத்து ஆனந்த்
வேலூர் - 632 002*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?