
அதிக கலோரி உடல் எடைக்கு காரணம். இதை தருவது கார்போஹைட்ரேட் மாவுச்சத்துள்ள உணவுகள். அவற்றை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக ஆலோசனை தரப்படுகிறது.
ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாவுச்சத்தில் நல்ல மாவுச்சத்து, கெட்ட மாவுச்சத்து என இரு வகைகள் உள்ளன.
பிஸ்கட், ரொட்டி, கேக், பேஸ்ட்ரி, நுாடுல்ஸ் என்று சுத்திகரித்து பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் கெட்ட மாவுச்சத்து உடையவை. இவற்றில் சர்க்கரை அதிக அளவில் இருக்கும். காய்கறிகளில் உருளைக் கிழங்கு, வாழைக்காய் இதில் சேரும்.
உமி நீக்கப்படாத முழு தானியங்கள், சிறு தானியங்கள் நல்ல மாவுச்சத்து உடையவை.
உடல் எடையை குறைக்க, மாவுச்சத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.
தலைமுறையாக நாம் இட்லி, தோசை, அரிசி சாதம் சாப்பிட்டே வளர்ந்திருக்கிறோம். வழக்கத்தில் இருந்த ஒன்றை தவிர்த்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பழக்கத்தில் இருந்த ஒன்றை நம்மால் முழுமையாக கைவிடவும் முடியாது. நம் மூளைக்கும் மாவுச்சத்து தேவை. உடல் எடையை குறைக்கும் போது மாவுச்சத்தின் அளவு தான் முக்கியம்.
புரதம், நார்ச்சத்துடன் தேவைக்கு ஏற்ப நார்ச்சத்து உள்ள நல்ல மாவுச்சத்தும் சேர்க்க வேண்டும்.
வழக்கமான அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசி, பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள் சேர்க்கலாம்.
'பேலியோ, கீட்டோ' போன்ற பல வகை 'டயட்'களில் எது நல்லது, கெட்டது என்று சொல்லவே முடியாது.
தனி நபரின் தேவை அடிப்படையில் தான் தேர்வு செய்ய முடியும். சிலருக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனப்படும் இன்சுலின் முழுமையாக செயல்படாத தன்மை இருக்கும். அவர்களுக்கு குறைந்த அளவு மாவுச்சத்து தான் தர முடியும்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?